தேசிய நெடுஞ்சாலையில் 11ம் வகுப்பு விடைத்தாள் ஏற்றி வந்த வாகனம் டயர் வெடித்து விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் 11ம் வகுப்பு  விடைத்தாள் ஏற்றி வந்த வாகனம் டயர் வெடித்து விபத்து

விபத்து

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 11ம் வகுப்பு விடைத்தாள் ஏற்றி வந்த வாகனம் டயர் வெடித்து விபத்து.
திருவண்ணாமலையிலிருந்து 11ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஏற்றி கொண்டு, பத்துக்கு மேற்பட்ட அஞ்சல் துறை வாகனங்களில் புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், செங்குனம் பிரிவு பாதையில் ஏப்ரல் நாலாம் தேதி இன்று காலை 10 மணி அளவில் திண்டிவனத்தைச் சேர்ந்த ராமராஜ் ஓட்டி வந்த வேன் பின் பக்க டயர் திடீரென வெடித்ததால் நிலைதடுமாறி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. இதில் வேனில் துப்பாக்கி ஏந்தி விடைத்தாள்களுக்கு பாதுகாப்புக்காக வந்த காவலர் சசிகுமார் படுகாயமும், ஓட்டுனர் ராமராஜ், மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் தினேஷ் குமார் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திடீர் சாலை விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று கிரேன் மூலம் வாகனத்தை மீட்டு போக்குவரத்து சரி செய்தனர், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விடைத்தாள் சேதம் ஏதும் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story