810 கிலோ தங்க நகைகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

810 கிலோ தங்க நகைகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 666 கோடி ரூபாய் மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.


தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 666 கோடி ரூபாய் மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
ஈரோடு அடுத்த சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்தின் சரக்கு லாரி சுமார் 666 கோடி ரூபாய் மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சித்தோடு அருகே சமத்துவபுரம் பகுதியில் சாலை வளைவில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவல் அறிந்த சித்தோடு காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கு உள்ளான லாரி மற்றும் தங்க நகைகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விபத்துக்குள்ளான லாரி ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் இருவரும் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் மாற்று வாகனத்தின் மூலம் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் தங்க நகைகள் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story