பீர் பாட்டில் ஏத்திச்சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான் புரத்தில் இயங்கி வரும் பிரபல பீர் கம்பெனியிலிருந்து 1500 பாட்டில் பீர் பாட்டில் ஏற்றுக்கொண்டு லாரி கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது,சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாக்கம் என்ற பேருந்து நிலையத்தின் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த லாரியில் தனியார் பீர் தொழிற்சாலையில் இருந்து 12 பீர் பாட்டில் கொண்டே தான் 500 பெட்டிகள் பள்ளத்தில் சிதறி கிடந்தன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் லாரியை சுற்றி பாதுகாப்பாக போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த லாரியில் வந்த தனியார் தொழிற்சாலைக்கு தகவல் தெரிவித்தனர். இதை எடுத்து சாலையோர பள்ளத்தில் கவிந்த வாகனத்தில் இருந்து மது பாட்டில்களை எடுக்க சாலையோரத்தில் மது பிரியர்கள் குவிந்தனர்.