ஆட்சிமொழி பயிலரங்கம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாட்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாட்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடந்தது.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். இதில் அரசு கடிதங்கள், கோப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் தமிழ் சொற்களை பிழையின்றி பயன்படுத்துவது குறித்தும், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள், மொழிபெயர்ப்பு, கலைச்சொல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செம்மொழி செயல்பாடுகள், சமுதாய சிந்தனைகள், ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு, அரசாணைகள், கணினித்தமிழ் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிலரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சித்ரா, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் மோட்சானந்தம், உதவிப் பேராசிரியர் நாகராஜன், டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரி பேராசிரியர் அண்ணா கலியன், முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர்கள் சிவகாமி, தம்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.