துப்பாக்கி வேண்டும் அரசு மருத்துவரின் வீடியோ வைரல்

துப்பாக்கி வேண்டும் அரசு மருத்துவரின் வீடியோ வைரல்

முத்துக்குமார்

துப்பாக்கி வேண்டும்: அரசு மருத்துவரின் வீடியோ சமூக வலைதலைகளில் வைரல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அரசு மருத்துவராக மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அரசு மருத்துவருக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக அருகில் உள்ளவர்கள் மருத்துவரின் அம்மாவை தாக்கி வேலியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதே போல் கடந்த மாதம் திமுக பெண் கவுன்சிலர், அருவடைய கணவரும் சேர்ந் மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையில் பணியில் இருந்த மருத்துவர் முத்துக் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி, சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் மருத்துவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாணையும் நடந்தது. இந்நிலையில் அரசு மருத்துவர் முத்துக்குமார் இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோன காலத்திலும் பல்வேறு உயிர்களை காப்பாற்றிய அரசு மருத்துவராகிய தனக்கு உயிருக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும் என மாவட் ஆட்சியர், மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ள தாக பேசி உள்ள வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story