திருப்பூர் உழவர் சந்தையில் விவசாயியை அலுவலர் தாக்கி வெளியேற்றிய வீடியோ வைரல்
விவசாயியை வெளியேற்றும் அலுவலர்
திருப்பூர் உழவர் சந்தையில் வியாபாரிகளை அனுமதிப்பதாக தெரிவித்த விவசாயியை உழவர் சந்தை அலுவலர் தாக்கி வெளியேற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் செங்காட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னிமுத்து 35 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தான் விளைவிக்கும் காய்கறி மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் உழவர் சந்தையில் வரும் சில விவசாயிகள் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும்,
இதனால் நேரடி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த கன்னிமுத்து உழவர் சந்தை அலுவலர் மணிவேல் இடம் முறையிட்டுள்ளார் ஆனால் இதனை ஏற்காத மணிவேல் கன்னிமுத்துவை கடை அமைக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் உதவியுடன் கன்னி முத்துவை வெளியேற்ற முற்பட்டுள்ளார் அப்போது கன்னிமுத்து வெளியேற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,
அவரை தகாத வார்த்தைகளால் பேசியும் தாக்கியும் உழவர் சந்தையை விட்டு அலுவலர் மணிவேல் வெளியேற்றிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.