இனிப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன் காட்சி

பொங்கலை முன்னிட்டு சங்ககிரி அருகே காடயாம்பட்டி காமாட்சி அம்மனுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் தை பொங்கலை முன்னிட்டு அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர் , இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு இனிப்பு பலகாரங்களை (ஸ்விட் ) கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story