கிராம மூத்தகுடிமக்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை

கிராம மூத்தகுடிமக்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை

கிராமங்களில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை- ஆட்சியா் தகவல்

கிராமங்களில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை- ஆட்சியா் தகவல்

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியான Mobile Medicare Unit (MMU) திட்டம் தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.மா.பிரியா உரிமைத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் பொருட்டு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பிசியோதெரபி, யோகா பயிற்சியாளர், ஓட்டுநர், சமூக சேவகர் உள்ளிட்ட பணியாளர்களை கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டாரத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்த மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலனில் அனுபவமிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்படி ஆணை பெறப்பட்டதை தொடர்ந்து மேற்காணும் பணியிடங்களுடன் கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்களுடன் மாவட்ட சமூகநல அலுவலர், நாமக்கல் அவர்களிடம் 10.01.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும், மேலும் இது தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அறை எண்-234 ல் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தினை நேரில் அணுகி பெற்று கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story