மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தன்னார்வ அமைப்பு

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தன்னார்வ அமைப்பு

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தன்னார்வ அமைப்பு

ஓட்டேரி அரசு தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் ஓட்டேரி அரசு தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட முதன்மை மேலாளர் ஜான்சுகுமார், திட்ட மேலாளர்கள் வேலாயுதம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டேரி விடுதி காப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா தலைமை தாங்கி ஓட்டேரி, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, காட்பாடி ஆண்கள், பெண்கள் விடுதி என 5 அரசு தங்கும் விடுதிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அவற்றை விடுதி காப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.இதில் விடுதி காப்பாளர்கள் இருதயராஜ், பழனி, குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story