வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் !

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் !

வாக்காளர் விழிப்புணர்வு 

சேலம் சவுடேஸ்வரி கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது.
சேலம் சவுடேஸ்வரி கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இதை உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் தொடங்கி வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்த வேண்டும். இதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவர் படை, நாட்டு நலத்திட்ட மாணவிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பேராசிரியர்கள் என 700 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மூலம் வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியத்தையும், வருங்கால வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தப்படுகிறது. இக்கல்லூரியில் படிக்கும் 300- க்கும் மேற்பட்ட மாணவிகள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். எனவே முதல் முறையாக வாக்களிக்க உள்ள மாணவிகள்100 சதவீதம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். இதற்காக பல்வேறு உத்திகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஊர்வலத்தில் சவுடேஸ்வரி கல்லூரி முதல்வர் பூங்கொடி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மோகன்குமார், தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் யுவராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story