காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்டு பாலக்கோடில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்டு பாலக்கோடில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம், 07/12/2023 தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், பாலக்கோடு வட்டரா தலைவர் சங்கர் தலைமையில் நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்ட்த்திற்க்கு வட்ட செயலாளர் தண்டபாணி, வட்ட பொருளாளர் அன்பழகன், நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி கருணை அடிப்படையில் அரசு பணியில் இருந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கினார். இந்த உத்தரவை தற்போது தமிழக அரசு நிறுத்தியுள்ளது. இந்த கருணை அடிப்படையிலனா வேலையை மீண்டும் வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்று வந்த எரிபொருள் படி 2500 ரூபாய், மீண்டும் அதனை வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கும், இறந்து போனவர்களுக்கும் அவர்களிடலிருந்து பிடித்தம் செய்த தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் .உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

Tags

Next Story