பூம்புகார் அருகே கடல் அரிப்பை தடுக்கும் சுவர்

பூம்புகார் அருகே கடல் அரிப்பை தடுக்கும் சுவர்

திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

பூம்புகார் அருகே சின்னமேட்டகல் கடல் அரிப்பை தடுக்கும் சுவர், மீன் ஏலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட சின்னமேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 9.78 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நேர்கல் தடுப்புசுவர் மற்றும் மீன் ஏலக்கூடத்தையும், வானகிரி கிராமத்தில் மீன் இறங்குதளத்தையும் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக ஒரே நேரத்தில் தொடங்கி வைத்தார்.

சின்னமேடு பகுதியில் நடைபெற்ற துவக்கவிழா நிகழ்ச்சியில் முதலமைச்சரின் கானொளி திறப்புவிழா நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரலையில் கானும் வகையில் 2 எல்இடி திரை வைக்கப்பட்டு விழா மேடையில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வானகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்ற நியைில் சின்னமேடு மீனவ கிராமத்தில் ஒருவரும் வராததால் விழா மேடை நாற்காலிகள் காலியாக இருந்தது.

தொடர்ந்து வானகிரி மீனவர் கிராமத்தில் காணொளி காட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சின்னங்குடி மீனவ கிராமத்திற்கு வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி குத்துவிளக்கேற்றி மீன் ஏலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தனர். தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் நேர்கல் தடுப்புசுவரின் நீளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்துதர கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். .

Tags

Next Story