தங்கம் வென்ற மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

தங்கம் வென்ற  மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

கிக் பாக்ஸிங்

கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்கு திரும்பிய மாணவன் ராஜாவுக்கு தனியார் பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தனியார் (மலர்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10 வகுப்பு படிக்கும் ராஜா (14) பங்கேற்று ஈரான் ஈராக் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாட்டைச் சேர்ந்த வீரர்களுடன் மூன்று சுற்றுவாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்றார்.

பள்ளிக்கு திரும்பிய மாணவன் ராஜாவுக்கு தனியார் பள்ளியில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர் ராஜாவுக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் சக மாணவர்களும் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து, வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தொடர்ந்துமாணவர் ராஜா செய்தியாளர்களிடம் கூறும் போது - சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் கடந்தாண்டு ஒராண்டு க்கும்மேல்‘கிக் பாக்ஸிங்’ பயிற்சி பெற்றேன்.

தொடர்ந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றேன். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றேன். புதுடில்லியில் நடந்த சர்வதேச போட்டியில் 47 கிலோ எடை பிரிவில் மூன்று பிரிவுகளாக, கஜகஸ்தான், ஈராக், துருக்கி நாடுகளுடன் போட்டியிட்டு தங்கம் வென்றேன். ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கம் பெற்று தருவதே எனது லட்சியமாக கொண்டுள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக

, தற்போது முதல் பயிற்சி பெற்று வருகிறேன். விவசாய குடும்பத்தை சேர்ந்த எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story