பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
புதுடெல்லியில் வாக்கோ இந்தியா நடத்திய மூன்றாம் உலக அளவிலான சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி-2024 போட்டி நடைபெற்றது . இதில் இந்தியா உட்பட 14 நாடுகள் பங்கேற்றனர் Uzbekistan, kazagiztan, tazigistan,swedan, Croatia, Switzerland,Finland, Singapore,iraq, estonia, turkey, jordan, nepal, greatbritain, ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரக்கனக்கான வீரர் வீராங்கனையினர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து இந்தியா சார்பாக சிவகங்கை மாவட்டம், இடையமேலூரை சேர்ந்த இடையமேலூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவன் வசந்தன் மற்றும் மவுண்ட்லிட்ரா பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவன் இன்பண்ட் ஆல்வின் சுதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இன்பண்ட் ஆல்வின் சுதன் -32kg kicklight பிரிவில் பங்கேற்று இறுதி போட்டிவரை சென்று வெள்ளி பதக்கமும், வசந்தன் -69kg ஜூனியர் kicklight பிரிவில் பங்கேற்று தொடர்ச்சியாக மூன்று வீரரர்களை வீழ்த்தி இறுதி போட்டியில் uzbekistan வீரரை வென்று. இந்தியாவிற்காக தங்க பதக்கமுப் வென்றுள்ளார். இதில் தமிழ்நாடு கிக்பாக்ஸிங் அணியின் முதன்மை பயிர்ச்சியாளர் சுரேஷ்பாபுவின் தமிழக அணி 54 தங்க பதக்கங்களுடன் ஓவரால் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டி சென்றது. இன்று தங்கபதங்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய வசந்தன் மற்றும் ஆல்வினை ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story