குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்கு உற்சாக வரவேற்பு
மாணவருக்கு உற்சாக வரவேற்பு
ஜம்மு காஷ்மீரில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற சிவகங்கை மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் 4வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் நேஷனல் சாம்பியன் ஷிப் போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம்,பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழகம் சார்பில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருணேஸ்வரன் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் கோவை கற்பகம் கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார். சிவகங்கை வந்த அவரை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Next Story