சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டு யானை!

சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டு யானை!

காட்டு யானை

காட்டு யானை அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றினுள் நுழைந்து அதன்பின்பு அங்கிருந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்துக்குட்பட்ட தேக்கம்பட்டி நெல்லி மலை ஓடந்துறை ஆகிய பகுதிகளில் காட்டு யானை மற்றும் பிற வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.அடர்ந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வருவது வழக்கமாகி விட்டது.

இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் சாலையின் நடுவே நடந்து சென்ற ஒற்றைக் காட்டு யானை அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றினுள் நுழைந்து அதன்பின்பு அங்கிருந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.அப்போது சாலையோரமாக இருந்த பழக்கடையின் தடுப்பை உடைத்து உணவு தேடிய காட்டு யானையின் செயல்களை அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனின் வீடியோவாக எடுத்து தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. காட்டை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது கிராமங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வந்திருந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையம் ஊட்டி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடக்கூடிய பகுதியில் யானையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் எனவே வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

Tags

Next Story