மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
ஆட்சியரிடம் முறையிட்ட பெண் 
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்தினரை அழைத்து கொண்டு பையில் மண்ணெண்ணெய் பாட்டிலை மறைத்து எடுத்து வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்தினரை அழைத்து கொண்டு பையில் மண்ணெண்ணெய் பாட்டிலை மறைத்து எடுத்து வந்த பெண் ஒருவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை வழிமறித்து இடப்பிரச்சனை தொடர்பாக பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உடனடியாக ஆட்சியரின் பாதுகாப்பு பணியில் உடன் இருந்த காவலர் மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அப்புறப்படுத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா செங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரா. கணவர் 2005 ஆண்டு இறந்துவிட்டார். முத்த மகள் அபிஷாவின் கணவரும் இறந்துவிட்டதால் அபிஷாவின் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், சந்திரா வி.எஸ் டிரஸ்க்கு சொந்தமான ஒரு ஏக்கர் 47 சென்ட் நிலத்தில் குத்தகை சாகுபடி செய்து வருகிறேன்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் குழந்தைசாமி என்பவர் சந்திராவின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனக்கு சாதமாக தீர்ப்பு பெற்ற சந்திரா. நிலத்தில் சாகுபடி செய்வதற்காக தண்ணீர் பாய்ச்சியபோது குழந்தைசாமி அவரது மகன்கள் ஜெயராஜ் சஞ்சீவ் ராஜ் ஜெயபாரதி ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல் நிலையத்திலும் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பம்பு செட் மோட்டாரை எதிர்மனுதாரர்கள் அடித்து உடைத்து விட்டதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்வதாகவும் போலீசார் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Tags

Next Story