மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த பெண் மருத்துவர் கைது !
போலி பெண் மருத்துவர்
ஆம்பூரில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த பெண் போலி மருத்துவர் கைது. வாணியம்பாடி,மார்ச்.13- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மூன்றாவது தார்வழி பகுதியில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் யோகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரகுபதி மனைவி ரஜினிகாந்தி(42) என்பவர் ஹோமியோபதி பட்டப் படிப்பு பாதியில் நிறுத்திய நிலையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த மருந்துகள், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story