ஊரை விட்டு விலக்கியதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் மனு !!
புகார் மனு
ஊரை விட்டு விலக்கி வைத்ததாக குளியனூர் கிராமத்தை சேர்ந்த காஞ்சனா மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் உங்குரான அள்ளி ஊராட்சி குளியனூர் பகுதியை சேர்ந்த காஞ்சனா மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, இரு மாதங்களுக்கு முன்பு இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு முன்பு இவர்கள் நிலத்தை அபகரித்து மந்திரி கவுண்டர் குமார் (எ) சேட்டும் சிமெண்ட் சாலை அமைத்து உள்ளனர் காஞ்சனா குடும்பத்தினர் இதனைக் கேட்டபோது மந்திரி கவுண்டர் தம்பி சேட்டும் காஞ்சனா குடும்பத்தை மிரட்டி வீடுகளை உடைத்து உள்ளனர். இதனால் காஞ்சனா மதிக்கோன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் சமரசம் செய்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர்.இதனை தொடர்ந்து மந்திரி கவுண்டர் குமார் அவரது தம்பி சேட்டும் காஞ்சனா குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர். இதனால் ஊரில் எந்த நிகழ்ச்சிக்கும் இவர்களை அழைப்பதில்லை இதனால் மன வேதனை அடைந்த காஞ்சனா குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஊரை விட்டு விலக்கி வைத்த மந்திரி கவுண்டர் குமார் மற்றும் சேட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு அளித்தார்.
Next Story