பெண் ஒருவர் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் காவல் துறையினர் தன்மகன் மீது பொய் வழக்கு பதிந்ததாக பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் காவல் துறையினர் தன்மகன் மீது பொய் வழக்கு பதிந்ததாக தர்ணா - சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சுற்றுச்சுவரை துளையிட்டனர், கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்த நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (55) என்பவர் மாலை போச்சம்பள்ளி 4 தர்னாவில் ஈடுபட்டார் மாலை நேரம் என்பதால் வாகன ஓட்டிகள் மீறி செல்ல முடியாமல் அவதிப்பட்டனர் விபரம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் பெண்மணியை சமாதானம்பபடுத்தினர் அந்த வழியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் அவர்கள் போக்குவரத்தை சீர் செய்ததற்கு காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து சென்றார் சுமார் அரை மணி நேரமாக பெண் தர்மாவில் ஈடுபட்டதால் தர்மபுரி திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பின்னர் பெண் போலீசார் மூலம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story