கணவருடன் பைக்கில் சென்ற பெண் விபத்தில் பலி

X
கோப்பு படம்
கணவருடன் பைக்கில் சென்ற பெண் விபத்தில் பலியானர்.
திருச்சி காட்டூர் பாலாஜி நகர் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 66). இவரது மனைவி பூமாவதி (வயது 54). இவர்கள் இருவரும் திருச்சி- தஞ்சை மெயின் ரோட்டில் உக்கடை ரயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். முத்துவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தவறி விழுந்தார் .இதில் கீழே விழுந்ததில் அவரது மனைவி பூமாவதிக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவா்கள் அவா்கள் இருவரையும் மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பூமாவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது கணவர் முத்துவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து தெற்கு பலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
