கலெக்டர் அலுவலகம் முன்பு டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த பெண்

சிறை காவலர் ஏமாற்றியதாக கூறி பெண் ஒருவர் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சார்ந்தவர் கலைவாணி இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளர்.

அதை அடுத்து சிறை காவலரான பிரித்திவிராஜன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக பிரித்திவிராஜனை இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரித்விராஜன் தனது தங்கையின் திருமணத்திற்கு கலைவாணையிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் பலமுறை பிரித்திவிராஜன் கலைவாணியிடம் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கலைவாணியை பிரித்திவிராஜன் துன்புறுத்தி வந்ததாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரித்திவிராஜன் மீது எஸ்பி அலுவலகத்தில் கலைவாணி புகார் அளித்திருந்த நிலையில், கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி பிரித்திவிராஜன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கலைவாணி பிரித்திவிராஜனிடம் கேட்டதற்கு பிரித்விராஜன் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் தான் காவல்துறையில் பணிபுரிவதாகவும் தன்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே பிரித்விராஜன் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடன் வாங்கிய பணம் மற்றும் நகையை மீட்டு தர வேண்டும் மேலும் தன்னை ஏமாற்றிய பிரித்விராஜ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளிக்க வந்த கலைவாணி, திடீரென கையில் இருந்த டீசலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story