கையாலும், கல்லாலும் தாக்கியதில் ஒரு பெண் காயம்!

விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேங்காய் தின்னிபட்டி கிராமத்தை சேர்ந்த புஷ்பவள்ளி வயது 37. இவருடைய உறவினரான அழகன் என்பவருக்கும் நடந்து செல்லும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் கடந்த ஏழு வருடமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதில் புஷ்பவள்ளியை அழகன், நல்லதம்பி, ஜெகதீசன் ஆகிய மூன்று நபர்கள் சேர்ந்து தாக்கியதில் புஷ்பவள்ளிக்கு மண்டை உடைபட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story