மரக்கிளை முறிந்து தலையில் விழுந்து பெண் படுகாயம்

மரக்கிளை முறிந்து தலையில் விழுந்து பெண் படுகாயம்

மரக்கிளை முறிந்து தலையில் விழுந்து பெண் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மரக்கிளை முறிந்து தலையில் விழுந்து பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி. அவரது மனைவி சுபைதா. இவர்களது வீட்டில் அதிக முட்கள் கொண்ட மரம் ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த மரத்தின் கிளைகள் அருகே செல்லும் மின்கம்பியில் உரசிக்கொண்டிருந்தது.இதனால் அடிக்கடி சுபைதாவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இந்த மரக்கிளையை வெட்டிவிடுமாறு மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் ஊழியர்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாமே அரிவாளை வைத்து மரத்தை வெட்டிவிடுவோம் என சுபைதா நினைத்தார். இதையடுத்து அவர் அரிவாளை எடுத்து மரத்தின் கிளைகளை வெட்ட தொடங்கினார்.ஆனால் திடீரென சாய்ந்த மரக்கிளை மின் கம்பியில் பட்டதோடு அதேவேகத்தில் சுபைதாவின் தலையில் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த சுபைதா அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், சுபைதா படுகாயமடைந்து கீழே விழுந்த நேரத்தில் பல நாட்களாக வராமலிருந்த மின் ஊழியர்கள் மரத்தை வெட்ட வந்துள்ளனர். பின்னர் ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்.

Tags

Next Story