திருப்பூரில் கணவரை மீட்டுத் தரக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா
திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன் இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு 9 வயது மகன் மற்றும் 12 வயது மகள் உள்ள நிலையில் இவர் அமுதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு அவருடன் வாழ்ந்து வருவதாகவும் தனது கணவரை மீட்டு தர வேண்டும் எனக் கூறி,
பாதிக்கப்பட்ட பெண் ஜெயசித்ரா திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் தனது புகாரை பெற்று நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் பணம் பெற்றுக் கொண்டு தன் மீது அமுதா கொடுத்த கொலை மிரட்டல் புகாரை பதிவு செய்ததாகவும் தனக்கு நியாயம் வேண்டும் தனது கணவரை மீட்டு தர வேண்டும் என,
கோரி வடக்கு காவல் நிலையம் முன்பாக அமர்ந்து ஜெயசித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து ஜெயசித்ராவை அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவரிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.