தக்கலை அருகே ஓடும் பேருந்தில் பெண்ணின் நகைகள் மாயம்

தக்கலை அருகே ஓடும் பேருந்தில் பெண்ணின் நகைகள் மாயம்

காவல் நிலையம்

தக்கலை அருகே ஓடும் அரசு பேருந்தில் பெண்ணிடம் இருந்த நகைகள் மாயமனது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து உதயமார்த்தாண்டத்திற்கு மதியம் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் நாகர்கோவில் பால் பண்ணை ஜங்ஷனில் இருந்து சூழால் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கைப்பையுடன் ஏறினார்.இந்த கைப்பையில் பண மும், சுமார் 6 கிராம் நகை யும் வைத்திருந்தார்.

பஸ் வில்லுக்குறியை கடந்து தக்கலை நோக்கி வரும்போது, அந்த பெண் தன் கையில் வைத்திருந்த கைப்பை திறந்து கிடப்பதை பார்த்தார். அப்போது அதில் உள் பையில் வைத்திருந்த நகை பெட்டியை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து பஸ்டிரைவர் பஸ்ஸை தக்கலை போலீஸ் நிலையம் முன்பு கொண்டு வந்தார்.

இதுகுறித்து தகவல் போலீசுக்கு தெரிவிக் கப்பட்டதும் போலீசார் பஸ்ஸில் வந்து பஸ்ஸில் இருந்த அனைத்து பயணிகளையும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் நகை சிக்கவில்லை. இதையடுத்து பஸ்ஸை பயணிகளுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story