நாமக்கல் அருகே மகளிர் தினத்தில் மகளிர் மட்டுமே நடத்தும் சூப்பர் மார்க்கெட்


நாமக்கல் அருகே மகளிர் தினத்தில் மகளிர் மட்டுமே நடத்தும் சூப்பர் மார்க்கெட்
நாமக்கல் அருகே மகளிர் தினத்தில் மகளிர் மட்டுமே நடத்தும் சூப்பர் மார்க்கெட்
நாமக்கல் மாவட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடேஸ்வரன் முயற்சியில் நாமக்கல் சமூக ஆர்வலர் பசுமை மா . தில்லை சிவக்குமார் வழிகாட்டுதல் படி 20 மகளிர் ஒருங்கிணைந்து பங்குதாரர்களாக கொண்டு உலக மகளிர் தின நாளில் சிங்களாந்தபுரம் பெரியசாமி கோவில் அருகில் " ஸ்ரீ அன்னை பல்பொருள் அங்காடியை" துவங்கி உள்ளனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரிவு , தரம் பிரித்தல், மற்றும் பேக்கிங் அனைத்து பணிகளையும் பெண்களே மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாமக்கல் சமூக ஆர்வலர் பசுமை மா.தில்லை சிவக்குமார் நமது கிங் நிருபரிடம் கூறுகையில், இந்த மகளிர் தினத்தில் இது போன்ற முன்னெடுப்பை மற்ற ஊர்களிலும் பெண்கள் துவங்கினால் அந்த பெண்களின் குடும்ப பொருளாதாரம் உயரும், மேலும் பெண்கள் அவர்களுக்கு தெரிந்த வேலைகளை கூட்டு முயற்சியுடன் எடுக்க வேண்டும் என்பதே இவர்கள் உணர்த்தும் பாடம் என்றார்.
Next Story


