சொந்த கிராமத்திற்காக தம்பதி செய்த அற்புத நிகழ்வு

சொந்த கிராமத்திற்காக தம்பதி செய்த அற்புத நிகழ்வு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரு தம்பி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது சொந்த கிராமத்திற்கு ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளனர். இவர்களது செயலை கண்டு கிராம மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியம்,கெண்டிரச்சேரி ஊராட்சியை சேர்ந்த தம்பதி. கட்சி பொறுப்புகளில் இருந்தது இல்லை.இவர்கள் தான் பிறந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்; இவர்கள் நடத்தி வரும் V.S கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் ரூ.10 லட்சம் செலவில் கிராமத்திற்கு புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்துள்ளனர். அந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சிற்று நிலையத்தை சம்பத் குப்பம்மாள் திறந்து வைத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கீர்த்தனாவிடம் ஒப்படைத்தனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையத்தை பெற்றுக் கொண்டது. இதில், 20 லிட்டர் அளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெறும் ரூ.5 பெற்றுக்கொண்டு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குகிறது. சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்த குடும்பத்தினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story