குமரி அருகே கால்வாய் குட்டையில் பிணமாக கிடந்த ஒர்க் ஷாப் ஊழியர்

குமரி அருகே கால்வாய் குட்டையில் பிணமாக கிடந்த  ஒர்க் ஷாப் ஊழியர்
பைல் படம்
குமரி அருகே கால்வாய் குட்டையில் ஒர்க் ஷாப் ஊழியர் பிணமாக கிடந்தார்.

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சுடுகாடு பகுதியில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் இல்லை. ஆனால் படித்துறை அருகே தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இந்த குட்டையில் இன்று காலையில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கன்னியாகுமரி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிணமாக மிதந்தவர் கொட்டாரத்தை சேர்ந்த சுந்தரம் பிள்ளை மகன் ஆறுமுகம் என்று அழகு (39) என தெரிய வந்தது.

ஒர்க் ஷாப் ஊழியர் ஆன இவர் கால்வாய் கரை ஓரமாக அமைந்துள்ள படித்துறையில் அமர்ந்து மது அருந்தும் போது குட்டையில் தவறி விழுந்து இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story