திங்கள்நகர் சந்தையில் அரிசி மூடை விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பழைய சினிமா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (65). இவர் திங்கள்நகர் பகுதியில் கடைகளில் மூடைகளை இறக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை திங்கள் நகர் மார்க்கெட் சாலையில் சேகர் என்பவர் கடையில் உள்ள பொருள்களை லாரியிலிருந்து இறக்கும் போது. அரிசி மூடை ஒன்று தவறி விஜயகுமார் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது விஜயகுமார் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த விஜயகுமாருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.