சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு !
சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி காமராஜ் நகர் சேர்ந்தவர் ஜோசப் (58). கல் சிற்ப கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்கிறார். நேற்று காலை அஞ்சுகிராமம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்து ஜோசப் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். மயங்கிய நிலையில் கிடந்த அப்பகுதியினர் ஜோசப்பை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் ஜோசப் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து உடல் குமரி அரசு மருத்துவ கல்லூரி கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த புகார் என் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இறந்து போன ஜோசப் தனது மகன் பிரவீன் என்பவரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சரக்கு வாகனத்தை ஓட்டிய டிரைவருக்கும், தனக்கும் சந்தையில் வைத்து தகராறு ஏற்பட்டதாக கூறி இருந்தார். இதனை அடுத்து திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவ கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோட்டார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், சமரசம் ஏற்பட்டு, உடலை இன்று பெற்று சென்றனர்.
Next Story