விக்கிரவாண்டி அருகே தொழிலாளி திடீர் சாவு

விக்கிரவாண்டி அருகே தொழிலாளி திடீர் சாவு
இறந்த தொழிலாளி
விக்கிரவாண்டி அருகே தொழிலாளி திடீர் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32).தொழிலாளி. இவர் நேற்று மாலை விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழி யாக சென்றவர்கள், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் பூபாலன் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபாலன் சாவுக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story