கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி தற்கொலை

கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி  தற்கொலை

தற்கொலை 

கொல்லங்கோடு அருகே கிட்னி பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி மனமடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் வண்டிக்காரவிளை பகுதியை சேர்ந்தவர் சைமன். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கிட்னி பாதிப்பு ஏற்பட்ட தால், ஊரில் தங்கி இருந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்தநிலையில் காலை வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக சைமனின் தந்தை சார்லி கோவிந்தன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story