மரம் வெட்டும் போது ஊழியர் விரல் துண்டான விபரீதம்
மரம் வெட்டும் போது ஊழியர் விரல் துண்டான விபரீதம்
வண்டலுார் அடுத்த கீரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரத்னகுமார், 64. வண்டலுார் உயிரியல் பூங்காவில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பாம்புகளை கையாளுவதில் அனுபவம் வாய்ந்த இவரை, ஓய்வுக்கு பின், தினக்கூலி அடிப்படையில் பூங்கா நிர்வாகம் அதே வேலையை அவருக்கு வழங்கி வந்தது. நேற்று மதியம், பாம்பு கூண்டு அருகேயுள்ள மரத்தை வெட்டுமாறு, அதிகாரிகள் கூறியதை அடுத்து, இயந்திரம் வாயிலாக மரங்களை வெட்டும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக, இயந்திரம் வெட்டியதில் அவரது இடது கையில் கட்டை விரல், மோதிர விரல் துண்டாகின. சக ஊழியர்கள் அவரை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story