பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த மஞ்சள் நீர் கால்வாய்

பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த மஞ்சள் நீர் கால்வாய்

தேங்கியுள்ள கழிவுகள்

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் புத்தேரி பகுதியில் துவங்கும் மஞ்சள் நீர் கால்வாய், பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, ரயில்வே ரோடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.

மழைக்காலத்தில் நகரில் மழைநீர் தேங்காத வகையில், மன்னர் காலத்தில் இந்த கால்வாய் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை என, நீண்ட நாட்களாகவே நகரவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, 40 கோடி ரூபாய் மதிப்பில், கால்வாய் மீது மூடி அமைத்தல், சுவர் கட்டுதல் போன்ற பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளன.

இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில், பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் மிதந்தபடி நத்தப்பேட்டை ஏரிக்கு செல்கின்றன. இதனால், கால்வாய் முழுதும் நாசமாகி வருகிறது. மஞ்சள் நீர் கால்வாய் ஏற்கனவே குப்பையாக காட்சியளிக்கும் நிலையில், எண்ணற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து ஏரிக்கு செல்வதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது."

Tags

Next Story