நகை வாங்குவது போல் மோதிரத்தை திருடி சென்ற இளம் தம்பதியினர் கைது

நகை வாங்குவது போல் மோதிரத்தை திருடி சென்ற இளம் தம்பதியினர் கைது

கைது 

திருவட்டார் அருகே ஜுவல்லரி கடையில் நகை வாங்குவது போல் நடித்து மோதிரம் திருடிய இளம் தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் இவர் அதே பகுதியில் ஜுவல்லரி கடை நடத்தி வருகிறார்.இவரது ஜுவல்லரி கடையில் கடந்த 7 ம் தேதி டிப் டாப் உடை அணிந்த ஜோடி நகை வாங்க சென்றுள்ளனர் பின்னர் நகைக்கடை உரிமையாளரிடம் நகைகளை எடுத்து வரும்படி கூறினார்.

அப்போது அங்கு இருந்த நான்கு கிராம் மோதிரத்தை திருடி உள்ளனர் பின்னர் நகைகள் பிடிக்கவில்லை என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளனர் இரவு பரமசிவன் நகைகளை சரி பார்த்தபோது அதில் இரண்டு தங்க மோதிரம் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் நகை வாங்க வந்த ஜோடி மோதிரத்தை திருடியது தெரிய வந்தது இது குறித்த புகாரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து நூதன முறை யில் நகை திருடி சென்ற இளம் ஜோடியை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று திருவட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சுவாமியார்மடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதி யில் சந்தேகத்து இடமான வகையில் நின்றிருந்த ஆண், பெண் இருவரை யும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரித்தனர்.

இதில், அவர்கள் திருவிதாங்கோடு கேரளபுரத்தைச் 'சேர்ந்த இர்சத் மற்றும் அவரது மனைவி அனிஷா என்ற இர்பானா என்பதும், இருவரும் பூவன்கோடு ஜூவல்லரியில் மோதிரம் திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரை யும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மோதிரத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர்சிறை யில்அடைத்தனர்.

Tags

Next Story