வெள்ளியணை அருகே இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி அருகே உள்ள பெரிய வரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி கிருஷ்ணவேணி வயது 29. இவர் நவம்பர் ஐந்தாம் தேதி மதியம் 1.30 மணி அளவில் சுடு தண்ணீர் காய்ச்சுவதற்காக வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும், செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ணவேணியின் சகோதரர் குமார் என்பவர் இதுகுறித்து வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த தகவல் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த கிருஷ்ண வேனியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story