தேங்காய்பட்டனம் கடலில் சிறுமி மாயம்

தேங்காய்பட்டனம் கடலில் சிறுமி மாயம்

சிறுமி மாயம்

தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்த தந்தை மகள் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தந்தை மீட்பு மற்றும் மகள் மாயமானர்.

தமிழக கடலோரப் பகுதியில் கடல் சீட்டை மட்டும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியரும் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலுக்கு செல்லக்கூடாது என நேற்று எச்சரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் புதுக்கடை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியை சேர்ந்த பிரேமதாஸ் அவரது ஏழு வயது பெண் குழந்தை ஆதிஷாவை அழைத்துக் கொண்டு தேங்காய் பட்டணம் கடற்கரைக்கு சென்றுள்ளார் கடற்கரையில் இருவரும் நின்று கொண்டிருந்த போது,

திடீரென வந்த ராட்சத அலை இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது இதுவரது கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் நீந்தி பிரேமதாசை மீட்டனர் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேலும் கடல் அலையில் இழுத்துச் சென்ற அவரது மகள் ஆதிஷாவை மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை,

இது குறித்து புதுக்கடை போலீசாருக்கும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story