மின்கம்பம் உடைந்து விழுந்ததில் இளைஞா் பலி!
பைல் படம்
தூத்துக்குடியில் பழுது நீக்க ஏறியபோது மின்கம்பம் உடைந்து விழுந்த விபத்தில் மின் ஊழியரின் தற்காலிக உதவியாளர் உயிரிழந்தாா்.
. தூத்துக்குடி அண்ணாநகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த பெத்துராஜ் மகன் பெத்துகுமாா் (26). மின் ஊழியருக்கு தற்காலிக உதவியாளராக இருந்துவந்தாராம். இவா், காமராஜ் நகா் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுதுநீக்குவதற்காக ஏறினாராம். அப்போது, மின்கம்பம் உடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்
Next Story