திருவாரூர் : வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை
திருவாரூரில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கீழ பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வசந்த் வயது 25 . இவர் தொடர்ந்து அதிகமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டு மன உளைச்சலில் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இந்த சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story