பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளம்பெண் பலி
தென்காசி மாவட்டம்,சிவலார்குளம் பகுதியில் மோட்டார் இருந்து தவறி விழுந்து இளம் பெண் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சதீஷ். கடந்த 20 ஆம் தேதி தனது மனைவி சிநேகாவுடன் ஆலங்குளம் வந்து விட்டு பைக்கில் சிவலாா்குளம் திரும்பிக் கொண்டிருந்தாா். நல்லூா் விலக்கு பகுதியில் சென்றபோது பைக் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்ததில் சிநேகா பலத்த காயடைந்தாா். அவா் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தாா். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story