விருந்துக்கு வந்த இடத்தில் காஞ்சிபுரம் ஆட்டுபுத்தூர் ஏரியில் மூழ்கிய இளைஞர்

விருந்துக்கு வந்த இடத்தில் காஞ்சிபுரம் ஆட்டுபுத்தூர் ஏரியில் மூழ்கிய இளைஞர்

ஆட்டுபுத்தூர் ஏரியில் மூழ்கிய இளைஞர்

சென்னை காட்டுபாக்கம் ஜான்சி நகர் பகுதியை சேர்ந்த தேவ கணபதி என்பவர் பி.எஸ்.சி. படித்து முடித்துவிட்டு சென்னை காட்டுப்பாக்கம் அருகில் உள்ள கொரியர் டெலிவரி வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆட்டுப்புத்தூரில் வசிக்கும் அவரது சித்தப்பா நித்தியானந்தம் வீட்டிற்கு தேவகணபதி வந்துள்ளார். இன்று அவரது சித்தப்பா மகன் நிமலாநந்தன் என்பருடன் ஆட்டுப்புத்தூர் ஏரிக்கரைக்கு சென்று அங்கு கரையில் அவரது சித்தப்பா மகன் நிமலாநந்தன் நின்ற நிலையில் தேவகணபதி ஏரியில் குளிக்க சற்று தூரமாக சென்றதாகவும் பின்பு நீரில் மூழ்கி வெளியே வராததால் அவரது சித்தப்பா மகன் நிமலாநந்தன் அவரது அப்பா நித்தியானந்தத்திற்கு போன் செய்து உடனே அங்கு வந்து தேடினர். இது குறித்து காவல்துறைக்கும் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். தற்போது வரை சடலம் கிடைக்கவில்லை என தெரிய வருகிறது. பல மணி நேரமாக பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு துறை என தேடி வரும் நிலையில் அவருடைய உடல் கிடைக்காத நிலையில் உறவினர்கள் கவலை அடைந்தும், வெளிச்சமின்மை வெகுவாக குறைந்ததால் தீயணைப்பு துறையினரும் தேடுதல் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விருந்தினர் வீட்டுக்கு வந்த இடத்தில் இது போன்ற நிகழ்வில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் ஏரி கரையிலே நின்றிருந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story