கும்பகோணத்தில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 24.60 லட்சம் மோசடி
கோப்பு படம்
கும்பகோணத்தில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 24.60 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த 32 வயது இளைஞரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஏப்ரல் மாதம் வந்த தகவலில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய இளைஞர் எதிர் முனையில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.24.60 லட்சம் அனுப்பினார்.
ஆனால், இளைஞருக்கு பணம் பறிபோனதே தவிர, எந்தவிதத் தொகையும் கிடைக்கவில்லை.
இது குறித்து தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் இளைஞர் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story