சுகாதார துறையில் பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி செவிலியரிடம் பணம் பறித்த இளைஞர் கைது !

சுகாதார துறையில் பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி செவிலியரிடம் பணம் பறித்த இளைஞர் கைது !

கைது

சுகாதார துறையில் பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி செவிலியரிடம் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் சுகாதாரத்துறையில் பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி செவிலியரிடம் ரூ.31 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய இளைஞரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் புஷ்பாஞ்சலி. இவர் தற்காலிக செவிலியராக கடந்தாண்டு வேலை பார்த்து வந்தபோது, அவரிடம் அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் அறிமுகமானார். அப்போது தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், உங்களுக்கு விரும்பும் இடத்தில் பணிமாறுதல் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

பின்னர் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நிர்வாக அலுவலர் பேசுவதாக தொடர்பு கொண்டு மற்றொருவரும் புஷ்பாஞ்சலியிடம் பேசியுள்ளனர். இருவரும் புஷ்பாஞ்சலியிடம் பேசி நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் வாங்கித் தருவதாக கூறி, மூன்று தவணைகளாக ரூ.31 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புஷ்பாஞ்சலி தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்.14-ஆம் தேதி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி, திருப்பூரில் பதுங்கி இருந்த தஞ்சாவூர் மானாங்கோரை குடியானத் தெருவைச் சேர்ந்த நெ.ஆனந்த்(34) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story