நெடுங்கூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
சட்டவிரோத விற்பனை
காவல்துறையினர் மது பாட்டில்களை கைப்பற்றினர்
கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் தில்லைகரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 18ஆம் தேதி காவல் எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, அருகே உள்ள மூவானுர் பகுதியைச் சேர்ந்த வினோத் வயது 33 என்பவர், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 15 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், வினோத் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story