கெங்கவல்லி அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

கெங்கவல்லி அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட தனபால்

கெங்கவல்லி அருகே கள்ளச்சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 62 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் சாராயம் விற்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதன்பேரில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில், கெங்கவல்லி எஸ்ஐ செந்தில்குமரன் உள்ளிட்ட போலீசார் நடுவலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நடுவலூர் மாயனம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்ததில் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தனபால்(24) என்பதும், சாராயம் பதுக்கி விற்றதும் தெரிய வந்தது. உடனே, அவரை கைது செய்த போலீசார், 62 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.
Next Story