அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்த இளைஞர் கைது

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்த இளைஞர் கைது

மணல் கடத்தல் 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் கொள்ளிடம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கொள்ளிடம் போலீசார் கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனையபுரம் வடக்கு தெருவை சேர்ந்த 23 வயதான விக்னேஷ் தனக்கு சொந்தமான லாரியில் இரண்டு யூனிட் மணலை கடத்தி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பனையபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த லாரியை கொள்ளிடம் போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மணல் கடத்திய வரப்பட்ட லாரி மற்றும் இரண்டு யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story