தபால் நிலையங்களில் ஆதார் திருத்த முகாம்

தபால் நிலையங்களில் ஆதார் திருத்த முகாம்

கன்னியாகுமரியில் சிறப்பு ஆதார்ப்பதிவு மற்றும் திருத்த சேவைகள் முகாம் வரும் 27 முதல் ஜூன் 8ம் தேதி வரை நடப்பதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கன்னியாகுமரியில் சிறப்பு ஆதார்ப்பதிவு மற்றும் திருத்த சேவைகள் முகாம் வரும் 27 முதல் ஜூன் 8ம் தேதி வரை நடப்பதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களின் ஆதார் சேவையின் தேவை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி தபால் கோட்டத்தின் கீழ் உள்ள 44 தபால் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட்ட சிறப்பு ஆதார்ப்பதிவு மற்றும் திருத்த சேவைகள் வருகிற 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஜூன் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளன. புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது.

பெயர், முகவரி, மின்னஞ்சல், செல்போன், பிறந்த தேதி முதலியவற்றில் திருத்தம் மாற்றம் செய்யவும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அடையாள அட்டைகளை புதுப்பிக்கவும் ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூபாய் 100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய சான்றுகளோடு அருகில் இருக்கும் தபால் நிலையங்களை அணுகி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதியில் அல்லது ஊரில் குறைந்தபட்ச 100 பேருக்கு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் செய்ய வேண்டி இருப்பின் தபால் துறையின் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டு சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story