பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு : ஆட்சியர் துவக்கிவைப்பு

கரூர் மாவட்டத்தில் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" என்ற நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு. துவக்கி வைத்தார் ஆட்சியர். ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் அறியப்படுகிறது. ஆதாரில் ஒவ்வொரு தனிமனித விவர குறிப்புகளும் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்து அரசு பணிகளையும் எளிதாக எதிர்கொள்ள இருக்கும் என்பதால் இதனை ஒவ்வொருவரும் கட்டாயமாக கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு ஆதார் பதிவை மேற்கொள்ளும் போது பல்வேறு பணிகள் எளிமையாகிறது.

பொதுவாக ஆதார் பதிவுகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்திலும்,சிறப்பு முகாமிலும் பதிவு செய்யப்படும். இன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளிலேயே ஆதார் விவரங்களை சேகரிக்க அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணவாடி ஊராட்சியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணாக்கர்களின் விபர குறிப்புகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story