பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம்

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம்

ஆதார் பதிவு

தருமபுரி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற ஆதார் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்கள்.
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" சிறப்பு முகாம் மாநில அளவில் இன்று பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டதையொட்டி, அளே தருமபுரி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று (23.02.2024) நடைபெற்ற ஆதார் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் பார்வையிட்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மாணக்கார்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" சிறப்பு முகாம்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துவக்கப்பள்ளிகள். நடுநிலைப்பள்ளிகள். உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தலை மேற்கொள்ள ஏதுவாக ஆதார் பதிவு" சிறப்பு முகாம்கள் பள்ளிகளிலேயே இன்றைய தினம் நடத்தப்படுகிறது. இம்முகாமினைப் பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளிகள்) மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story